ஆயிரம் வார்த்தைகளால் -என்னை
புரிந்திட வேண்டினேன் உன்னிடம்
புரிந்தும் புரியாமல் புலம்புகின்றாயா?
புரிந்தும் ஏற்க மறுக்கின்றாயா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
தோழனாய் எப்போதும் தோள் கொடுத்தாய்
நல்லவை தீயவை எடுத்துரைத்தாய்
காதலனாய் என்னை அரவணைத்தாய்
இன்று என்னை புரிய மறுக்கின்றாய்
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
பாசத்தால் வேலியிட்டாய் அன்று
பாசத்தை வேசமென்கின்றாய் இன்று
பங்குபோட பாசமென்ன விலைப்பொருளா?
உறவுகள்மேல் பாசம் கொள்வது தவறா?
உன்னைமட்டு நேசியென்பது நியாயமா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
வாழ்க்கையின் ஆணிவேர் நம்பிக்கை-அதனை
புடுங்கி எறிகின்ற கோடாரியாய் சந்தேகம்
எதிலும் சந்தேகம் கொள் தீர்விருக்கும்
பாசம்மேல் சந்தேகம் கொண்டாய் என்ன செய்வேன்
புரியவைக்க முடியவில்லை
புலம்புகின்றேன் தனிமையிலே
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
உன் குழப்பத்திற்கு விடைதேடி
வினவினேன் வினாக்களை என்னிடம்
விடை கண்ணீராய் விழிவழியே.
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
.....................................................................
நட்பாயிருக்கையில் நம்பிக்கைகொள் நட்புமேல்
காதலராயிருக்கையில் நம்பிக்கைகொள் காதல்மேல்
கணவனாயிருக்கையில் நம்பிக்கைகொள் மனைவிமேல்
மனைவியாய் இருக்கையில் நம்பிக்கைகொள் கணவன்மேல்
நல்ல தந்தை தாய் இருக்கையில் நம்பிக்கைகொள் பிள்ளைமேல்
பாசமாய் நீ இருக்கின்றாயா? பாசம்மேல் நம்பிக்கைகொள்
உண்மை உறவுகள்மேல் நம்பிக்கைகொள்
சந்தேகம் உன்னை நெருங்காது.
............................................................................
45 comments:
புரிந்தும் புரியாமல் புலம்புகின்றாயா?
புரிந்தும் ஏற்க மறுக்கின்றாயுா?
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!//
புரிந்தும், புரியாதது போல இருப்பது தான் காதலோ?
இன்று என்னை புரிய மறுக்கின்றாய்
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!//
காதலில் முற்றிய காதல் என்று கூறுவார்களே! அதன் பின் விளைவு தான் இது என நினைக்கிறேன்.
தனிமையிலே
அவன் குழப்பத்திற்கு விடைதேடி
வினவினேன் என்னிடம்
விடை கண்ணீராய் விழிவழியே!//
இவை மனதைத் தொடும் வரிகள். கவிதை காதலனால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின், அன்பினை நாடிய உணர்வினை உரைத்து நிற்கிறது.
வழக்கம்போல கலக்கல் கவிதை...
வார்த்தைகள் எளிமையாய்... அழகு தோழி...
அருமையான வரிகள்
அருமை.. ரசித்து படித்தேன்..
நம்பிக்கைதான் எல்லாம்னு சொல்றாங்க..
ஆனா அது பொய்யாகும்போது எல்லாமே பூஜ்ஜியமா தெரியும்னு யாருமே சொல்லவில்லை அல்லவா?
உன் குழப்பத்திற்கு விடைதேடி
வினவினேன் வினாக்களை என்னிடம்
விடை கண்ணீராய் விழிவழியே.
catching lines.. good
புரியாத புதிர்கள் தானே வாழ்க்கை!
நம்பிக்கை கொள்ள அழைக்கும் முத்தாய்ப்பு வரிகளில் நம்பிக்கை பிறக்கிறது.பாராட்டுக்கள் ரோஜாவே.
வழக்கம்போல கலக்கி இருக்கீங்க.
நல்லா இருக்கு.
வாழ்க்கையின் ஆணிவேர் நம்பிக்கை-அதனை
புடுங்கி எறிகின்ற கோடாரியாய் சந்தேகம்
எதிலும் சந்தேகம் கொள் தீர்விருக்கும்
பாசம்மேல் சந்தேகம் கொண்டாய் என்ன செய்வேன்
புரியவைக்க முடியவில்லை
புலம்புகின்றேன் தனிமையிலே
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!
.....உணர்வுகளை, கவிதை வரிகளில் பிடித்து வைத்து அருமையாக எழுதி இருக்கீங்க.
அருமையான கவிதை தோழி!! சிலர் சந்தேகப்பட்டுவிட்டு - அதற்கு காரணம் அளவுகடந்த பாசம் என்று சாட்டு சொல்வார்கள்! உளவியல் ரீதியாக இது உண்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது! சந்தேகப்படுதல் ஒரு மனவியாதி! அவ்வளவுதான்!!
ம்ம்ம்ம் அருமையான கவிதை, நன்றாக சொல்லி இருக்கிறீர்கள், ஆனால் சந்தேகப்படுபவர்களால் முழுவதுமாக சந்தேகத்தை விட்டுவிட முடியாது, அதனால் எப்பொழுது ஒரு உறவுக்குள் இணைகிறோமோ அப்பொழுதே எதிர்பாலின் சில உணர்வுகளை புரிந்து விட்டு கொடுத்தால் பிரச்சனை வராது அல்லது வளராது என்பது என் கருத்து :-)
//வாழ்க்கையின் ஆணிவேர் நம்பிக்கை-அதனை
புடுங்கி எறிகின்ற கோடாரியாய் சந்தேகம்
எதிலும் சந்தேகம் கொள் தீர்விருக்கும்
பாசம்மேல் சந்தேகம் கொண்டாய் என்ன செய்வேன்
புரியவைக்க முடியவில்லை
புலம்புகின்றேன் தனிமையிலே
புரியமுடியவில்லை உன்னை என்னால்.!!!!//
வழக்கம் போல அசத்தல்....
மிக அருமையான வரிகள்
""""""தோழி பிரஷா""""""
மிக அருமை அருமை
வாழ்க வளமுடன்
இவன்
அறிமுகம் இல்லாத நண்பர்
ஜெமிநிவிவேக்.கே
ஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.
nICE:)
தங்கச்சி...இது வரை நீ போட்டு இருந்த ப்ரோபைல் போட்டோ வில் இப்போ போட்டு இருக்கிறது தான் செம டக்கரு...
மாத்தி யோசி சகோ சொன்னது தான் நான் சொல்ல விரும்புறதும்...:)) உன் கவிதை நல்லா இருக்கு..நல்லா இருக்குன்னு சொல்ல போர் அடிக்குது தங்கச்சி..ஒரு change க்கு நல்லா இல்லாமல் எழுதேன்...ப்ளீஸ்..:))))))
இவை உள்ளத்தை தொடும் வரிகள். கவிதை காதலனால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின்,அன்பினை நாடிய உணர்வினை உரைத்து நிற்கிறது. உண்மையை உரைக்க முயன்றும் தோற்றுப் போகிறது பென்ன்மை
உங்கள் Blog ரொரம்பவே வித்தியாசமாக,அழகாக இருக்கிறது!
வாழ்த்துக்கள்.
அருமை.. ரசித்து படித்தேன்..
nice nice
நம்பிக்கை ஆணிவேர்...சந்தேகம் கோடாரி. மிக ரசித்தேன்.
உறவுகள்மேல் பாசம் கொள்வது தவறா?
உன்னைமட்டு நேசியென்பது நியாயமா?
பங்குபோட பாசமென்ன விலைப்பொருளா?
புரிந்தும் புரியாமல் புலம்புகின்றாயா?
புரிந்தும் ஏற்க மறுக்கின்றாயா? நம்பிக்கைகொள் நட்புமேல்
நம்பிக்கையின்மேல் நம்பிக்கைவைத்தால் சந்தேகம் வருமா என்பது சந்தேகம்தான். வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லும் கவிதை அருமை, தோழி பிரஷா.
அருமையான கவிதைவித்தியாசமாக,அழகாக இருக்கிறது!
கண்ணீராய் விழிவழியே.
@நிரூபன் நன்றி நிரூபன்... பலவாறு யோசித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள்.
@Nagasubramanian நன்றி சகோ
@logu.. நம்பிக்கை காட்டுமிடத்தில் நம்பிக்கையுடன் நாமும் இருந்தால் வாழ்க்கை அழகாக இருக்கும் லோகு... நன்றி
@சி.பி.செந்தில்குமார் நன்றி சார்.
@இராஜராஜேஸ்வரி நன்றி ராஜேஸ்வரி
@Lakshmi நன்றி அம்மா
@Chitra மிக்க நன்றி அக்கா
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி நீங்கள் சொல்வது உண்மைதான் றஜீவன். நன்றி
@MANO நாஞ்சில் மனோ நன்றி மனோ
@jeminivivek.k அறிமுகமில்லா நண்பனே உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.. பாரட்டுக்கும் நன்றி நண்பரே
@Jana வாருங்கள் ஜெனா... உங்கள் வருகைக்கு நன்றி..
@ஆனந்தி..மாத்தி யோசி சகோ சொன்ன கருத்து உண்மையானதே... அக்காவின் ஆசைக்காக மொக்கை கவிதை எழுதிறன் சீக்கிரம். நன்றி அக்கா
@நிலாமதி உண்மைக்கு காலம் பதில்சொல்வதில்லை... வருகக்கு நன்றி அக்கா
@திருமதி ஜெயசீலன் மிக்க நன்றி சகோதரி
@tamilbirdszz thank you
@கலாநேசன் நன்றி கலாநேசன்...
@சிவரதி நன்றி சிவரதி
@கீதா மதிவாணன் நன்றி கீதா
@malathi in sinthanaikal நன்றி சகோ
Post a Comment