முத்தம் இதன் அர்த்தம்
அவர் தத்தம்
உறவுகளுக்கேற்ப
நித்தம் நேசிக்கப்படுகிறது
அன்பு நெஞ்சங்களாய்
அளவிட முடியாத
அன்பின் ஆழமதை
அள்ளியே வழங்கிடுவர்
அன்பு முத்தத்தினால்
கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்
முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் மறக்கின்றாள்
பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
கரைபுரட்டோடுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..
கூடப் பிறந்தோரும்
கூடி ஓடி விளையாடுவோரும்
கூட வரும் உறவுகளும்
கொடுத்து பரிமாறிடுமே
பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பரந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பாரிமாறுகிறார் பாசமாய்...
அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்.
42 comments:
//கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்//
நன்று...
ஒரே வார்த்தை - சூப்பர்
//அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்//
Nice! :-)
அருமை..
அவசரமோ.. அழுத்தமோ..
அன்பின் முதல் திறவுகோல்..
இந்த முத்தம்.
கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்
முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் மறக்கின்றாள்
நல்ல வரிகள் பிரஷா! குழந்தைகளோடு பழகுவதும், முத்தங்கள் பரிமாறுவதும் இனிமையான அனுபவங்கள்!!
நன்று..
சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பிள்ளைத்தமிழின் பருவங்களுள் ஒன்று
முத்தப்பருவம்.
முத்தத்தின் அழுத்தத்தில் உணர்ந்திடலாம் அன்பினை...
முத்தத்தின் ஆழத்தை சொன்ன தோழி பிரஷாவுக்கு என் அன்பு முத்தங்கள்..
//////
பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பரந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பாரிமாறுகிறார் பாசமாய்...
//////////
இவற்றிலெல்லாம்
முத்தங்கள் பயணப்படும்..
சத்தமின்றி..
அருமை !!!
//அன்பின் சின்னம் முத்தம்.//
கலக்குறீங்களே ப்ரஷா.!
கரு அருமை.!!
அருமையான வரிகளுடன் கவிதையினைச் சந்த நடையில் அமைத்திருக்கிறீர்கள்.
அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்.//
முத்தம் பற்றிய அனைத்து வர்ணனைகளையும் பொய்யாக்கும் வகையில் இறுதி வரியினை அழகாச் செத்துக்கி கவிதையின் அனைத்துக் கருத்துக்களையும் இதனுள் உள்ளடக்கி விட்டீர்கள்.
பக்கத்தில் இருந்துமட்டுமல்ல காற்றில் பரந்து(பறந்து என நினைக்கிறன்) தொலைபேசிகளிலும் பரிமாறுகிற முத்தம்!அருமைவரிகள்.
பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
கரைபுரட்டோடுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..
...cho chweet!
கவிதை கலக்கல் சகோ
அம்மா ,
எங்களது அழைப்பை ஏற்று தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும் போது தங்களும் நமது வலைப்பூ குழுமத்தில் பதிவிட அன்புடன் அழைக்கிறோம் , மேலும் எமது வலைப்பூவின் இளம் பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்கபடுதவும் .
நன்றி ,
Admin
அருமை.
மழலையின் முத்தம் எப்போதும் இனிப்பவை.
என் ஹைகூ முத்தங்கள் படித்தீர்களா ? haikhttp://sivakumarankavithaikal.blogspot.com/2011/01/8.html
அருமை தோழி பிரஷா.
//கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்//
ரொம்ப அருமையான வைர வரிகள் தோழி பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
”அனைத்து உயிர்க்கும் பொதுவாய்...... அருமை.
பொருத்தமாய் (கொஞ்சிக் கொஞ்சிப் பேசி....) அழகு ஜோடி.
//முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்//
சிலிர்க்கிறேன் இந்த வரிகளில்...
முத்தம் - தித்திப்பு...
@மனோவி நன்றி சகோ
@தமிழ் 007 நன்றி சகோ
@ஜீ... நன்றி ஜீ...
@logu.. நன்றி லோகு
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி உண்மைதான். நன்றி சகோதரா
@முனைவர்.இரா.குணசீலன் நன்றி சார்.
@MANO நாஞ்சில் மனோ ம்... நன்றி சகோ...
@Lakshmi மிக்க நன்றி அம்மா
@கவிதை வீதி சௌந்தர் > நன்றி சௌந்தர்
@Nagasubramanian நன்றி சகோ
@தம்பி கூர்மதியன் மிக்க நன்றி கூர்மதியன்.
@நிரூபன் மிக்க நன்றி நிரூபன்
@Nesan நன்றி சகோ
@Chitra நன்றி சித்திராக்கா
@விக்கி உலகம் நன்றி சகோ
@TamilRockzs இயலுமானால் முயற்சிக்கின்றேன். உங்கள் அழைப்பிற்கு நன்றி சகோ
@சிவகுமாரன் நன்றி சிவகுமாரன் பார்த்தேன் அருமை..
@asiya omar நன்றி சகோ
@தமிழ்தோட்டம் நன்றி
@மாதேவி நன்றி
@சிசு நன்றி சிசு.
Post a Comment