வழிமாறி போன கண்ணில்
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்
தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து
புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்
கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்
தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து
புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்
கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....
45 comments:
Awesome....
:)
//உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....//
ஆஹா அருமையான வலி.....
//பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்//
அருமை அருமை.....
கவிதை பிரவாகமாய் கரை புருளுகிறது. வாழ்த்துகள்.
(ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் இருக்கின்றன!)
ஒரே காதல் கவிதையா போட்டு தாக்கறீங்களே..
உங்கள் தேடல்களின் ஏக்கம் கவிதைகளில் பிரிதிபலிக்கிறது..
வாழ்த்துக்கள்..
//தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து//
Arumayaana varigal Prasha
தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்கள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்............கவிதை நன்றாக இருக்கிறது தோழி
அருமை... அருமை..!
nice
வார்த்தைகளெல்லாம் சும்மா சரமாரியாப் போட்டுத்தாக்குறீங்களே!! எப்புடி? :-)
பிரிவுகள் கொடுமையானவை தான் அதை மறைக்கவோ மறக்கவோ முடிவதில்லைத் தான்...
தோழி நான் ரொம்ப ரசித்த கவிதை ,.
நல்ல வரிகளில் நல்லதொரு கவிதை ...
//காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....//
வழக்கமாய் உங்கள் பதிவுகளை படித்து விட்டு சென்றுவிடுவேன்.. இன்று எழுதவைத்துவிட்டது மேலுள்ள வரிகள்.. காதல் ரணங்கள்.. வாழ்த்துக்கள்.
@♔ℜockzs ℜajesℌ♔™ நன்றி சகோ
@MANO நாஞ்சில் மனோ உங்கள் தோடர் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. நன்றி சார்.
@சேட்டைக்காரன் மிக்க நன்றி சேட்டைகாரா.. பிழைகளை சரி செய்கின்றேன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
@சி.பி.செந்தில்குமார் காதல் கவிதைகளுக்காவே ஆரம்பித்த தளமாச்செ சார். :)
மிகவும் அருமையான கவிதைங்க..
ரொம்ப டச்சிங்..
நன்றி சார்.
@Harini Nathan நன்றி கரினி
@ரேவா நன்றி ரேவா
@சே.குமார் நன்றி குமார்
@Nagasubramanian நன்றி சகோ
@ஜீ... முயற்சிதான் ஜீ.
@♔ம.தி.சுதா♔ உண்மை சுதா. நன்றி
@அரசன் நன்றி அரசன்.
@வசந்தா நடேசன்வருகைக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வசந்தா
@பதிவுலகில் பாபு மிக்க நன்றி பாபு
வலி மிகுந்த... அருமையான கவிதை...
//தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)//
”கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர் கடுகாம்! ”
ஆனால் அவளே தவிக்க விட்டுச் சென்றால்?!
நல்ல கவிதை
அருமையோ அருமை!
இந்தப் புலம்பல் இருவருக்கும் பொதுவானது
என்பதைக் குறிக்கத்தான் னே( ளே )எனப்
போட்டிருக்கிறீர்களோ
நல்ல படைப்பு தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
//புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்//
போகிற திசை எல்லாம்
உன்முகம் தெரிந்தால்
எந்த திசை கொண்டு
உன்னை நான் அடைவேன்
(இது இந்த கவிதையை சுட்டு ஒருத்தருக்கு அனுப்பியதும் அங்கிருந்து வந்த கவிதை )
வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
சூப்பரா இருக்கு பிரஷா! ஆழமான வரிகள்! எப்பவுமே உங்கள் கவிதையில் ஒரு சோகம் இருக்கிறதே? ஏன் ?
பிரிவின் துயரும் தேடலும் வார்த்தைக்ளுக்குள் ஏக்கமாய் நிரம்பிக்கிடக்கிறது தோழி !
கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....//
பிரிவின் வலியில் அகப்பட்ட மெழுகாதித் துடிக்கும் ஓர் ஜீவனின் முகாரி ராகமாய் அழுகிறது கவிதை. அருமையான வரிகளை எழுதுகிறீர்கள். ஆனால் தொடர்ச்சியாக ஒரு தலை இராகம் பாடுவதற்கு கண்டனங்கள். இடைக் கிடை கலந்து மாறி, வேறு கவிதைகளையும் எதிர்பார்க்கிறோம்.
வாவ் என்று வாய்திறக்கச்செய்கிறது வரிகள்
அருமையான காதலுணர்வுகள்
வாழ்த்துகள் தோழி
என்வீட்டிலும் ஒரு காதலேக்கமிருக்கிறது வந்து பாருங்கள்
நல்ல கவிதைபடித்த திருப்தி கிடைத்தது. ஏன் நிறைய சோக மான கவிதையாகவே எழுதரீங்க தோழி.
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
தேடி தேடி வார்த்தை பிடித்து கவிதை எழுதுவீர்கள் போல.
நான் ரசித்த வரிகள் இவை....
கவிதை நன்றாக இருக்கிறது....
//தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து//
நல்லாருக்குங்க..
Post a Comment