Monday, March 7, 2011

Share

உன் மனசு போல....



நான் சந்திக்கும் ஒவ்வொரு 
கடினமான கணபொழுதுகளையும்
எவ்வாறு சமாளிப்பேன்
உன் துணையின்றி...

தடுமாறும் தருணங்களில்
தலை தடவி
ஆறுதல் தரும்
தாயாய் இருந்த நீ
தவிக்க விட்டு செல்வதன்
காரணம் தான் புரியாமல்
புலம்புகின்றேன் பித்தனாய்

உணர்வினை பகிர்ந்து - உண்மை
அன்பினை பொழிந்த - நீ
உதறிட்ட பின்பும் - என்
உடலின் ஓர் அணுவும்
உன் நினைவின்றி அசையாதாம்

என் உடலாயிது - அதில்
உயிர் தான் இருக்கிறதா
உணரக் கூட முடியவில்லை 
ஏனெனில்!
உயிரை ஒப்படைந்து விட்டதால்
எப்பவோ உன்னிடத்தில்..

மரணத்தின் போதும் கூட
உன் மடியே தஞ்சமேன
என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல...

22 comments:

S Maharajan said...

//மரணத்தின் போதும் கூட
உன் மடியே தஞ்சமேன
என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல...//

அருமை தோழி

Harini Resh said...

//என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல...//
அருமையான வரிகள் பிரஷா :)

நிரூபன் said...

என் உடலாயிது - அதில்
உயிர் தான் இருக்கிறதா
உணரக் கூட முடியவில்லை
ஏனெனில்!
உயிரை ஒப்படைந்து விட்டதால்
எப்பவோ உன்னிடத்தில்..//

காதலின் பிரிவினையும் அதன் மூலம், மனதில் படிந்துள்ள வலியையும் கவிதை பாடி நிற்கிறது. கடந்த சில நாட்களாக ஒரு தலை ராகம் போல பிரிவுத் துயரை மட்டுமே பொருளாக்கி உங்களின் கவிதைகள் நகர்கின்றன. இன்னும் கொஞ்சம் ரசனையுள்ள விடயங்களையும் சேர்த்தால் நல்லதல்லவா?

தமிழ் உதயம் said...

உணர்வுகளை சொன்னது கவிதை.

சக்தி கல்வி மையம் said...

காதல் மணம் கமழும் கவிதை அருமை..

ரேவா said...

என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல...

கவிதை அருமை தோழி

ஹேமா said...

பிரிவின் வலியை உணர்ந்தால் மட்டுமே இப்படி உருக முடியும் பிரஷா.மகளிர் தின வாழ்த்துகள் தோழி !

சிந்தையின் சிதறல்கள் said...

உணர்வு பூர்வமான காதல்
வாழ்த்துகள்

Jana said...

என்
உடலின் ஓர் அணுவும்
உன் நினைவின்றி அசையாதாம்
-----------

மரணத்தின் போதும் கூட
உன் மடியே தஞ்சமேன
என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல..

இதயம் கனக்கும் வரிகள்

tamilbirdszz said...

Nic Poem

Chitra said...

கவிதை வரிகள், மென்மையான உணர்வுகளை சொல்கிறது.

எஸ்.கே said...

super!

ம.தி.சுதா said...

மன்னியுங்க இந்த அருமையான வரிகளுக்கு என்னால் கருத்திட முடியல...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//மரணத்தின் போதும் கூட
உன் மடியே தஞ்சமேன
என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல.///

....ஹம்ம்ம்ம்... உண்மையான உணர்வு.. :-))
நல்லா இருக்குங்க கவிதை.

Unknown said...

நல்கவிதை

shanmugavel said...

//தடுமாறும் தருணங்களில்
தலை தடவி
ஆறுதல் தரும்
தாயாய் இருந்த நீ//

தாயாய் இருந்திருந்தால் புலம்பாமல் என்ன செய்ய?

Unknown said...

அருமையான வரிகள் சகோ

A.M.Askar said...

unkal kavithaikalai nesithu vaasikkiren.thodarnthu eluthunkal unkal pani thodara en vaalthukkal.....

A.M.Askar said...

unkal kavithaikali nesithu vaasikkiren thodarnthu eluthunkal unkal pani thodara en vaalthukkal....

arasan said...

தோழி வரிகள் அப்படியே நெஞ்சிலே நிற்கிறது ...
வாழ்த்துக்கள்

கவிதை பூக்கள் பாலா said...

என் உடலாயிது - அதில்
உயிர் தான் இருக்கிறதா
உணரக் கூட முடியவில்லை

பிரிவின் வலியை உணர்ந்தால் மட்டுமே இப்படி உருக முடியும் பிரஷா.மகளிர் தின வாழ்த்துகள் தோழி !

jeminivivek.k said...

எல்லாம் வரிகளும் அருமை
எனக்கு பிடித்தவரிகள்
""தடுமாறும் தருணங்களில்
தலை தடவி
ஆறுதல் தரும்
தாயாய் இருந்த நீ
தவிக்க விட்டு செல்வதன்

காரணம் தான் புரியாமல்
புலம்புகின்றேன் என்றும்
பித்தனாய்""
வாழ்க வளமுடன்
தோழி பிரஷா
என்றும்
அன்புடன்
அறிமுகம் இல்லாத நண்பர்
ஜெமிநிவிவேக்.கே