நிலைமாறும் உலகில்
விலை போகும் மாதர்
நிலைதனை நினைக்க
நெஞ்சம் பொறுக்குதில்லை
பூத்துக் குலுக்கி
புதுமணம் வீசிற்ற
பூவைதனை பிடுங்கி
புழுதியினில் போட்டதினால் - வாசம்
புழுதிக்கே சொந்தமாயிற்ற
நிலையிதுவோ
வறுமையின் கொடுமையிலே
வயிற்று பசி போக்க
வசதி படைத்தோரிடம்
வயிற்றை நிரப்பிட்ட
நிலையிதுவோ
கோடி பொருளுக்காய்
நாடியே வந்தவன்
கூடியே வாழ்ந்திற்று
கூட்டிக் கொடுத்திட்ட
நிலையிதுவா..
பருவ வயதினிலே
பால் நிலை உணர்விலே
பாதை மாறி போனதினால் - இன்று
பரிதவிக்கும் நிலையிதுவோ..
குறி பார்த்தே பெண்ணை
பொறி வைத்து பிடித்து
பொதியாக்கி - கூறு
விலை கோரியதினால்
உருவான நிலையிதுவா
அற்ப சொத்துக்காய்
ஆயுளை சொர்க்கமாக்கி
நித்தம் நித்தம்
செத்து செத்து பிழைக்கும்
சோகமதை சொல்ல முடியாது
சுவர்களுக்கிடையிலே
சுகத்தை கொடுத்து
சூனியமானது அவர்
தம் வாழ்வு...
விலை போகும் மாதர்
நிலைதனை நினைக்க
நெஞ்சம் பொறுக்குதில்லை
பூத்துக் குலுக்கி
புதுமணம் வீசிற்ற
பூவைதனை பிடுங்கி
புழுதியினில் போட்டதினால் - வாசம்
புழுதிக்கே சொந்தமாயிற்ற
நிலையிதுவோ
வறுமையின் கொடுமையிலே
வயிற்று பசி போக்க
வசதி படைத்தோரிடம்
வயிற்றை நிரப்பிட்ட
நிலையிதுவோ
கோடி பொருளுக்காய்
நாடியே வந்தவன்
கூடியே வாழ்ந்திற்று
கூட்டிக் கொடுத்திட்ட
நிலையிதுவா..
பருவ வயதினிலே
பால் நிலை உணர்விலே
பாதை மாறி போனதினால் - இன்று
பரிதவிக்கும் நிலையிதுவோ..
குறி பார்த்தே பெண்ணை
பொறி வைத்து பிடித்து
பொதியாக்கி - கூறு
விலை கோரியதினால்
உருவான நிலையிதுவா
அற்ப சொத்துக்காய்
ஆயுளை சொர்க்கமாக்கி
நித்தம் நித்தம்
செத்து செத்து பிழைக்கும்
சோகமதை சொல்ல முடியாது
சுவர்களுக்கிடையிலே
சுகத்தை கொடுத்து
சூனியமானது அவர்
தம் வாழ்வு...
65 comments:
"சுவர்களுக்கிடையில் சுகத்தைக் கொடுத்து
சூனியமானது அவர்கள் வாழ்வு.."அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
குறி பார்த்தே பெண்ணை
பொறி வைத்து பிடித்து
பொதியாக்கி - கூறு
விலை கோரியதினால்
உருவான நிலையிதுவா
......ஆழமான வரிகள்! சரியாக சொல்லி இருக்கீங்க.... இந்த மாதிரியும் சமூக அக்கறையோடு நிறைய கவிதைகள் எழுதுங்க.
>>>>சுவர்களுக்கிடையிலே
சுகத்தை கொடுத்து
சூனியமானது அவர்
தம் வாழ்வு...
டச்சிங்க் லைன்ஸ்
ஃஃஃஃஃஅற்ப சொத்துக்காய்
ஆயுளை சொர்க்கமாக்கி
நித்தம் நித்தம்
செத்து செத்து பிழைக்கும்
சோகமதை சொல்ல முடியாதுஃஃஃஃ
பலரின் எண்ணப் பிரதிபலிப்பு....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
மிக அருமை தோழி பிரஷா
என் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
"""""அறிமுகம் இல்லாத நண்பர்""""
உங்கள்
ஜெமிநிவிவேக்.கே
ஓ..பிரஷா...எனக்கும் நெஞ்சு பொறுக்க வில்லை...என்ன பண்றது பிரஷா..இது ஒரு குல தொழில் போலே நடக்குதே...பாதிக்க பட்ட பெண்கள் உண்மையில் பாவம்...எல்லாம் இந்த அரைசாண் வயிறு படுத்தும் பாடோ தங்கச்சி...???
சுவர்களுக்கிடையிலே
சுகத்தை கொடுத்து
சூனியமானது அவர்
தம் வாழ்வு...
அருமை தோழி.... நல்ல கவிதை வாழ்த்துக்கள்
உண்மையை சொல்லவேண்டுமானால்...மனதை கணக்கா செய்த கவிதை
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்
கசப்பான உண்மைகள் , உங்கள் வரிகளில் ..
அருமையான கவிதை மீண்டும் உங்களிடம்...நன்றி...
வரிகளில் விலைமாதர்களின் வாழ்கையின் நாழிகை துளிகள்
நல்ல சிந்தை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி
Kavithai romba nalla irukku....
சூனியமான வாழ்வு - நெஞ்சு பொறுக்குதில்லை!
உணர்வுகளை அழகாகப் பதிந்திருக்கிறீர்கள்
//சுவர்களுக்கிடையிலே
சுகத்தை கொடுத்து
சூனியமானது அவர்
தம் வாழ்வு...//
அருமையான வரிகள் சகோ
நெஞ்சு பொறுக்குதில்லையே :(
உண்மைதான் மேடம், சரியாக எழுதி உள்ளீர்கள்
மனதைத்தொடும் உண்மையான வரிகள்
நன்றி தோழி சமூகத்தின் அவலமிது எழுதப்பட வேண்டிய விடயம்
ORU SILA PENKALUKKU YERPADUM AVALA NILAIYAI SOLLIYIRUKKEENGA UNGAL INTHA SAMOOGA AKKATAIYAANA KAVITHAIYAI THODARNTHU ELUTHUNGAL
அருமையான கவிதை சகோ
சுட்டிக்காட்டி தவறுகளை
தட்டி எழுப்புவதால் சமுகத்தை
எட்டிப் பார்க்க நினைத்தீரோ அரசியலை
குட்டிச் சந்தேகம் பிரஷா...
உங்கள் முயற்ச்சிக்கு
என் வாழ்த்துக்கள்
பாரதி வீரம் உங்கள் கவிதைகளில்..
இந்த சமூகத்திற்கான கவலை எங்கள் கவிதையில்..
வாழ்த்துக்கள்..
//பால் நிலை உணர்விலே
பாதை மாறி போனதினால் - இன்று
பரிதவிக்கும் நிலையிதுவோ..//
எனக்கு ஏனோ இந்த வரிகள் தான் உரைத்தது.. நல்ல கவிதை, நன்றி.
ஒரு பெண்ணின் மனநிலையோடு உணர்வு மாறாமல் எழுதியிருக்கிறீர்கள் பிரஷா !
அழகாய் சொல்லிருகிரீர்கள். உங்கள் சமுதாய நல நோக்கம் அருமை. மேலும் தொடருங்கள்.
சமூக அக்கறையோடு வரையப்பட்ட கவிதை
நெஞ்சம்பொறுக்குதில்லை தான் தோழி
பூத்துக் குலுக்கி
புதுமணம் வீசிற்ற
பூவைதனை பிடுங்கி
புழுதியினில் போட்டதினால் - வாசம்
புழுதிக்கே சொந்தமாயிற்ற
நிலையிதுவோ//
பெண்களைப் போகப் பொருளாக்கி வாழ்வோரையும், எங்கெங்கெல்லாம் பெண்மை களங்கப்படுத்தப்படுகிறது என்பதையும் கவிதையில் அழகாகச் சொல்லிய்ள்ளீர்கள்.
ஆழமான வரிகள் , அனைத்தும் இன்றைய நிலையில் உண்மைகளே வாழ்த்துக்கள்
ஆழ்மான உணர்வுகள்
உணர்வான உண்மை வரிகள்...
//பூத்துக் குலுக்கி
புதுமணம் வீசிற்ற
பூவைதனை பிடுங்கி
புழுதியினில் போட்டதினால் - வாசம்
புழுதிக்கே சொந்தமாயிற்ற
நிலையிதுவோ//
அருமையான வரிகள் வலிகள் கூட தரும்..
தொடரட்டும் உங்க சமுதாய விழிப்புணர்ச்சி கவிகள்..
Ashwin Arangam
குறி பார்த்தே பெண்ணை
பொறி வைத்து பிடித்து
பொதியாக்கி - கூறு
விலை கோரியதினால்
உருவான நிலையிதுவா
நெஞ்சம் பொறுக்குதில்லை.!
அருமையான கவிதை
@Ramani நன்றி பெரியவரே
@Chitra உங்கள் கருத்தை ஏற்று மேலும் சமூககககக் கவீதைகள் எழுத முயற்சிக்கின்றேன். நன்றி அக்்கா
@சி.பி.செந்தில்குமார் நன்றி செந்தில் சார்..
@♔ம.தி.சுதா♔ மிக்க நன்றி சுதா
@jeminivivek.k உங்கள் வருகை வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
@ஆனந்தி.. அவர் அவர் விதியென்பதா இல்லையேல் சதியென்பதா?
@ரேவா நன்றி ரேவா
@ரஹீம் கஸாலி நன்றி ரஹீம்
@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா
@Vijay @ இணையத் தமிழன் நன்றி நண்பரே
@வேடந்தாங்கல் - கருன் நன்றி கருன்
@அ .செய்யது அலி நன்றி நண்பரே...
@சே.குமார் நன்றிகுமார்.
@middleclassmadhavi நன்றி சகோ
@Harini Nathan நன்றி கரினி...
@இரவு வானம் நன்றி சகோதரா
@நேசமுடன் ஹாசிம் நன்றி நண்பரே
@sulthanonline தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்
@விக்கி உலகம் நன்றி நண்பரே
@சிவரதி நன்றி சிவரதி
# கவிதை வீதி # சௌந்தர்
நன்றி சார்
@வசந்தா நடேசன் நன்றி வசந்தா
@ஹேமா மிக்க நன்றி அக்கா
@நிலாமதி நன்றி அக்கா தொடர்கின்றேன்.
@VELU.G ம் நன்றி
@Jaleela Kamal ஆம் சகோ
@நிரூபன் நன்றி நிரூபன்.
@bala நன்றி பாலா.
@Earn Money Online without any Investment மிக்க நன்றி
@கலாநேசன் நன்றி கலாநேசன்.
@Ashwin-WIN நன்றி சகோ
@Jana நன்றி ஜெனா
உங்களின் கவிதைகளை விரும்பி படிக்கிறேன் வரிகள் அனைத்தும் உள்ளத்தை தொட்ட வரிகள் வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் உங்களின் கவிதைப் பணி.
அருமை.
Post a Comment