பகுதி-01
ஜெனனி குடும்பத்தில் முத்த பொண்ணு 2 தம்பி 1 தங்கை. பெற்றோர் சொல்லே வேதவாக்காய் ஏற்று நடப்பவள். படிப்பே உலகமென இருந்தாள். கிராமத்தில் பள்ளியில் படித்து சிறந்த பெறுபேறுகள் பெற்றாள். மேற்படிப்பிற்காக நகரம் செல்லவேண்டும். மேற்படிப்பை தொடர முடியுமா என அவள் மனதுள் கேள்விகள் பல குடும்ப வறுமையே அதற்கு காரணம். தந்தை மகளின் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவளின் மேற்படிப்பிற்காக தந்தை தன் கெளரவத்தை தள்ளி வைத்து உடன் பிறப்பிகளிடம் உதவிகேட்டார் அவர்கள் மறுத்தனர். தந்தை மனம் சோரவில்லை தொடர்ந்து தனது நண்பன் ஒருவனிடம் உதவி கேட்டார் கிடைத்ததும் குடும்பமே சந்தோஷத்தில். இருப்பினும் பணத்தைவிட பெரும் பிரச்சனையாக அவள் நகரத்தில் தங்குமிடப் பிரச்சனை நகரத்தில் உறவுகள் யாருமில்லை. பல்கலைகழக விடுதியில் தங்க முடிவுசெய்து மேற்படிப்பை தொடங்க ஆரம்பித்தாள்....
ஜெனனி நகரத்து பல்கலை கழகம் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தாள். முதலாவது நாள் பல்கலைகழகம் போனால் அங்கு புதிய முகங்களை காண மனதில் ஒருவித பதட்டம் தோன்றியது. இருப்பினும் சுதாரித்தவளாய் பல்கலைகழக வாயில் நோக்கி விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். அப்போ "ஏய் பெண்ணே..." என ஒர் அழைப்பு கேட்டு திரும்பினால் 3 ம் வருட மாணவர்களான திலக்கும் அவன் நண்பர்களும். பின் அவளை பகிடிவதை செய்ய ஆரம்பித்தனர்.
"ஏய் உனது பெயரென்ன?" என திலக் அதட்டிக்கேட்டான்.
தனது பெயரை தடுதடுத்த நாவினால் கூறினாள். அவளிடம் மேலும் பலவற்றை அதட்டி அதட்டி கேட்டுகொண்டிருந்தான் திலக் அவன் நண்பர்கள் கைகொட்டி சிரித்துக்கொண்டிருந்தனர். அவனின் அசிங்கமான கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் அழ ஆரம்பித்தாள். அப்போதும் விடவில்லை 2 மணித்தியாலங்கள் அவளை வெயில் நிற்கும்படி கூறி திலக்கும் நண்பர்களும் மரத்தடியில் அமர்ந்து புதிதாக வருபவர்களை அழைத்து பகிடிவதை செய்தவண்ணம் இருந்தனர்.
1 மணித்தியாலம் அவள் வெயிலில் நின்றும் அவர்கள் மனம் இளகவில்லை மீண்டும் அவள் அருகில் வந்து திலக் வெறித்து அவள் கண்களை பார்த்தான். அவள் நிலத்தை நோக்கி தன் பார்வைய செலுத்தி அழுதாள். அப்போது திலக் கிளாஸ் நண்பன் சந்தோஷ் அங்கு வந்தான். திலக் ஜெனனியை " சந்தோஷ்க்கு உன்னை அறிமுகம் செய்... " என அதட்டினான். அவள் அவனுக்கு தன் விபரத்தை கூறினாள். "ஓ நீ கிராமத்து பொண்ணா...?" என கேட்டு சிறிதாய் சிரித்தான். பின் 10 நிமிடங்களின் பின் நீ வகுப்புக்கு போகலாம் என சந்தோஷ் கூறி அவளை அனுப்பினான். மனதினுள் சந்தோஷ்க்கு நன்றி கூறி நகர்ந்தாள். திலக் கோபத்துடன் சந்தோஷை பார்த்துவிட்டு வகுப்பறை நோக்கி நடந்தான்.
வகுப்புக்குள் நுழைந்து தன் இருக்கையில் புத்தக பொதியை வைத்து விட்டு முகம் கழுவி வந்தமர்ந்தாள். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். ஜெனனியும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். " ஹாய்...." கூறியபடி அவள் அருகில் சாரு வந்து அமர்ந்து கொண்டாள். இருவரும் நட்புடன் அறிமுகப் படுத்திக்கொண்டனர். இடைவேளை நேரமும் சாரு ஜெனனியுடன் இணைந்து சாப்பிட்டாள். ஒரு நாளில் இருவரும் நண்பிகளானார்கள் இருப்பினும் ஜெனனி மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது காரணம் சாரு நகரத்தில் பிறந்த வளர்ந்தவள் நாகரீகமாய் ஆடை அணிந்து அழகாக காணப்பட்டாள். இவளோ தாவணி போட்ட கிராமத்துப்பெண். சாரு நட்பு ஒத்துவருமா? என தன்னுள் கேள்வி கேட்டவண்ணம் இருந்தாள்.
ஏதுவாயினும் தற்பொழுது சாரு மூலம் தனக்கு ஒரு ஆறுதல் கிடைத்ததாக எண்ணி பெருமூச்சு விட்டாள். வகுப்பு முடிந்து அனைவரும் புறப்பட்டனர். சாருவை எற்றிப்போக சாரு அண்ணன் காரில் வந்து நின்றான் " பாய்...." கூறி சாரு விடைபெற்றாள்.
சாரு விடைபெற்று சென்றதும் மனதில் ஒருவித படபடப்பு தோன்றிட வேகமாக பல்கலைக்கழக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சிறிது தூரம் சென்றவள். தன் பின்னால் யாரே வருவது போன்று தோன்றிட திரும்பியவள் திடுக்கிட்டாள் திலக்கும் அவன் நண்பர்களும் அவளை பின்தொடர்ந்து வருவதை கண்டு... கண்டும் காணாதவளாய் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவர்களே அவள் கிராமத்தை பற்றி கிண்டல் பண்ணிய வண்ணம் தொடர்ந்தனர். அவளை அவர்கள் பின் தொடர்ந்ததற்கான காரணம் அவளின் இருப்பிடம் தெரிந்து கொள்ளவதற்காக என்பது ஜெனனிக்கு புரியவில்லை. விடுதியை சென்றடைந்ததும் திரும்பி பாரர்த்தாள் திலக் விடுதி வாசலில் நின்றுகொண்டிருந்தான். ஏன் என காரணம் புரியாமல் மனதில் வினாக்கள் தொடுக்க ஆரம்பித்தாள்...
முதல் நாளே திலக்கின் நடவடிக்கை ஜெனனி மனதில் பயம் ஆட்கொள்ள ஆரம்பித்தது. முதல் தடவையாக குடும்பத்தினரை விட்டு வெகு தூரம் வந்து தனிமையில் இருப்பது தனக்கு வரப்போகும் பிரச்சனைகளை யும் சவால்களையும் எண்ணி அவள் மனம் கலங்கியது. தனிமையில் அழுதாள் மனம் ஏதிலும் நாட்டம் கொள்ளாமையால் தூங்க ஆரம்பித்தாள்.
அவள் இருக்கும் விடுதியில் ஒரு அறையில் 2 பேர் சேர்ந்து இருக்கலாம். இரண்டாவது நாள் அவள் அறைக்கு புதியளாய் வானதி இணைந்தாள். பின் இருவரும் ஒன்றாக பல்கலைக்கழகம் செல்ல ஆரம்பித்தனர். அப்போதும் திலக் தொல்லை குறையவில்லை. 1 மாதங்களாக பகிடிவதை என்று சாட்டு கூறி ஜெனனியை தனிமையில் கூட்டிச்சென்று. பாசமாக கதைக்க ஆரம்பித்தான் பாசமாக கதைத்தாலும் தான் பாசமாக கதைத்ததாக யாருக்கும் கூறவேண்டாமென மெருட்டவும் அவன் மறப்பதில்லை. இருப்பினும் ஜெனனி முதல் வருட மாணவி என்பதால் பயம் மட்டுமே தனித்து நின்றது அவள் மனதில்.
பல்கலைகழகத்தில் பகிடிவதை காலம் முடிந்தது. சாரு வானதி இருவரின் நட்பும் இவளின் மனதில் தைரியத்தை கொண்டுவந்தது. நாட்களும் உருண்டோடின. நகரவாழ்க்கைக்கு ஏற்றார்போல் தன்னையும் தன் மனதையும் மாற்றியமைத்தாள். சந்தோஷ் ஜெனனியை எதிரெதிரே காணும் போது மட்டும் நலம் விசாரித்து செல்வான். ஒரு நாள் " ' ஜெனனி...... " என அழைத்த சந்தோஷை நோக்கினாள். அவளை நலம் விசாரித்த மறுகணமே அவன் அவளிடம் தனிமையில் திலக்குடன் கதைப்பதை குறையுங்கள்...." கூறினான் அவள் காரணம் கேட்பதற்குள் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான் சந்தோஷ்.
(தொடரும்.....)
26 comments:
நல்ல துவக்கம்.நன்றாக எழுதுகிறீர்கள்.
ஜனனிக்கு உள்ளதைப்போல உங்களுக்குள்ளும்
ஒரு பதட்டம் இருப்பதுபோல் எழுத்தில் தெரிகிறது.
இயல்பாக எழுதுங்கள் தொடர்ந்து வருகிறோம்.
தொடர வாழ்த்துக்கள்
ஆரம்பமே நன்றாக் இருக்கிறது தொடருங்கள். ........காத்திருந்து வாசிக்க ஆவல்
முதலில் உங்களுடைய புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் பிரஷா!
கதை தொடக்கமும் அதனுடைய இறுதிப்பகுதியும் அருமை! ஒரு சஸ்பென்ஸ் உடன் கதையை நிறுத்தியுள்ளீர்கள்! ஸோ, எல்லோரையும் போல அடுத்த பகுதியைப் படிக்க நானும் ஆவலாக உள்ளேன்! தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!
கதைக்களம் - பல்கலைக்கழகம் - தெரிவு அருமை!
அருமையான தொடக்கம்
பந்தியின் அளவு சின்னதாய் இருந்தால் வாசிக்க சிறப்பாக இருக்கும்
வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
நல்ல துவக்கம்.நன்றாக எழுதுகிறீர்கள்.
தொடர வாழ்த்துக்கள்
அருமையான தொடக்கம். வாழ்த்துக்கள்!
//முதல் முதலில் ஒரு தொடர்கதை ஏழுதுகின்றேன் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களை கூறிச்செல்லுங்கள்//
ok sure!
உங்கள் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள் பிரஷா!
தொடர்து நல்ல படைப்புக்களை கொண்டு வர வாழ்த்துக்கள்.
காலையிலேயே வடை சுட ஆரம்பிச்சாச்சா......ஹைய்யோ ஹைய்யோ......
நல்லா இருக்குங்க... தொடர்ந்து எழுதுங்கள்....
அப்பாடா.....இப்பதான் நம்ம ரூட்டுக்கு வந்திருக்கீங்க...! கண்டினியு பண்ணுங்க....நல்லாயிருக்கு.
தொடருங்கள் காத்திருக்கிறோம். !!!
வாழ்க்கை என்னும் அத்தியாயத்தில்
அடி எடுத்து வைத்த அவள்
அடுத்த படியதனை அழகாக நகர்த்திடவே
பள்ளிக்கூடம் எதுமின்றி
பாடத்திட்டம் அதுவுமின்றி
அவள் பெற்ற அனுபவத்தினூடே
வாழ்வின் அர்த்த்ங்களை தேடும்-உங்கள்
தொடர்கதை அழகாக வளர வாழ்த்துக்கள்
உங்களின் முதல் தொடரா? ஆரம்பமே அருமையா இருக்கு. நிறைய தமிழ் வார்த்தைகள் உபயோகம் பண்ணி இருக்கீங்க. பகிடி வதை ராக்கிங்கா? கிராமச்சூழ் நிலையிலிருந்து நகரச்சூழ் நிலைக்கு மாறும் பெண்ணின் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
யதார்த்தமா சொல்லி இருக்கீங்க தொடருங்க
interesting
தொடர்கதை சிறுகதை பாணியில் நகர்வது போல உணர்கிறேன்.. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. தொடரும் கதையை தொடர்கிறேன்..
கவிதாயினி பிரஷாவை காணவில்லை. கண்டு பிடித்தால் 9842713441 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
நாளை உங்கள் திருவிழா.. உங்களின் கவிதை விருந்துக்காக காத்திருக்கிறோம்.
உண்மையில் யார் நல்லவன் சந்தோஷ் அல்லது திலக்?
//தொடர்கதை சிறுகதை பாணியில் நகர்வது போல உணர்கிறேன்.//
கொஞ்சம் வார்த்தைகள் கட்டுரை ஸ்டைலில் இருக்கிறது. இன்னும் ஒரு முறை திருத்தி எழுதியிருக்கலாம்.
நல்ல துவக்கம் தொடர வாழ்த்துக்கள்
\\" அறிந்தும் அறிமாமலும்
புரிந்தும் புரியாமலும்
மனிதர்கள் வாழ்வு நகர்கின்றது... !
ஒவ்வொருவர் வாழ்க்கையும்
புரிதலின்றி புதிராயானது இன்று....!"\\
Enaku ithan pidichirukku.
kathaikum namakum romba distancunga.
ராகிங் காட்சிகள நேரில் அந்த இடத்தில் இருக்கும் உணர்வைத்தந்தன.
பிறமொழிகலப்பு அதிகமில்லாத நடை நேர்த்தி.
love triangle start ஆயிடுச்சா? ஆக மொத்தம் யாரும் படிக்கறதுக்கு கல்லூரி போகறதில்லை, இல்லன்னா கதாசிரியர்கள் விடறதிலை... அடுத்த பார்ட்??
Post a Comment