பார்க்க முடியவில்லை
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.
சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...
அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?
பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..
கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.
சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...
அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?
பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..
கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...
51 comments:
//பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..//
மிக அருமை!
/////அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது////
அருமை.... அக்கா..
சிந்திக்க வேண்டிய தருணம்
போனதால் நிந்திக்கப்படுகிறோம்...
ஏன் நீங்கள் தமிழ்மணத்தை இன்னும் சேர்க்கல... வருகையாளர் கூட வரும் இடத்தில் அதுவும் ஒன்றல்லவா..
கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...///////////
கோடாரிக்காம்புகள் குலத்திலே முளைத்திட்டால், தமிழன் என்ன? எந்த இனத்திற்கும் இதுதான் கதி!
உணர்வுப் போராட்டம் மிக்க கவிதை! நன்று!
எழுச்சி மிகுந்திருக்கிறது..
ஒன்றுபட்டு போராடுவோம் ..
உணர்ச்சிகள் நிறைந்த போராட்டக் கவிதை.
கஷ்ட்டமாக இருக்கிறது படிக்க
கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...//
அருமையாக இருக்கிறது இந்த வரிகள்! ஆனாலும் நாம் நம்பிக்கையைக் கைவிட வேண்டாம்! நல்லதே நடக்கும் என்று நம்புவோம்!
அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது....
ஒன்றுபட்டு போராடுவோம் ..
எங்களுக்கென்று நாங்கள் பாதுகாத்த பண்பாடு கலாசாரம் எல்லாம் அழிகிற அநியாயத்தை கலாசார சீர்கேட்டை வரிக்கு வரி வெளிப்படுத்தி மனதைக் கலங்க வைத்திருக்கிறீர்கள் பிரஷா !
நல்கவிதை
மூச்சு இழுக்க மூக்கிருந்தும்
காற்று வாங்க உரிமை இழந்த
இனத்தில் பிறந்தவன்
அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன//
எங்கள் எல்லோர் உச்சியின் மீதும் சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வு கவிதையில் தெரிகிறது. காலங் கடந்த ஞானம் என்பதை இப்போது தான் உணர்ந்து கொண்டோம்.
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்று..
வலிகளை அப்படியே பதிவு செஞ்சிருக்கிங்க ....
இந்நிலை நிச்சயம் மாறும் சகோ ....
எழுத வேண்டியதை எழுதவேண்டிய நேரத்தில்
மிகச் சரியாக எழுதியிருக்கிறீர்கள்
புரிந்து கொள்ள வேண்டியவர்கள்
புரிந்து கொண்டால் சரி வாழ்த்துக்கள்
அருமையான பகிர்வு
முடிவு கிடைக்கும் வரை போராடுவோம்
இப்போது எழும் டிவீட்டர் அலை அப்போதே எழுந்திருந்தால் ஒரு வேளை விழித்திருக்கும் ..
உணர்வுப் போராட்டம் மிக்க கவிதை!
இணைய தமிழர்கள் முயற்சி நிச்சயம் வெற்றி பெரும்.
நல்ல கவிதை தோழி!!!
உங்கள் ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி மேடம்...
எழுச்சி மிகுந்த சிந்திக்க வைக்கும் கவிதை
அருமை...அருமையிலும் அருமை...!!
உணர்ச்சிவசப்படவைக்கும் வரிகள்....
ஒரு வேண்டுகோள் :
உங்க BLOG'ன் வடிவமைப்பு கண்ணுக்கு ரொம்ப அயற்சிய ஏற்படுத்துதுங்க.. படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. எளிமையா மாத்துனா நல்லா இருக்கும்.
\\பகல் கனவை நிஐமாய் கொண்டு\\
Sathiyama oru nalaiku nijamagum..
pagal kanavunu sollatheenga.
போராட்டத்தின் முடிவாய் வரும் வலியை கவிதையின் அனைத்து வரிகளும் காட்டுகிறது..
வலியான கவிதை..
@ஜீ... மிக்க நன்றி ஜீ
@ம.தி.சுதா நன்றி சுதா.. தமிழ்மணத்தில் இணைப்பு கொடுக்கின்றனான்
@வைகை உண்மைதான் வைகை... நன்றி
@எஸ்.கே நன்றி சகோதரா...
@தம்பி கூர்மதியன் நன்றி தம்பி கூர்மதியன்...
@karthikkumar நன்றி கார்த்தீக்குமார்...
@சே.குமார் நன்றி குமார்....
@முனியாண்டி வருகைக்கு நன்றி சகோ...
@மாத்தி யோசி நம்பிக்கைதான் வாழ்க்கை.. நன்றி சகோதரா..
@ரேவா ஓன்றுபடுவோம்...
@கலாநேசன் நன்றி கலாநேசன்...
@யாதவன் வருகைக்கு நன்றி யாதவன்...
@நிரூபன் காலங்கடத்திடினும் ஒன்றுபடுதல் தானே வெற்றி.. நன்றி சகோ..
@sakthistudycentre-கருன் நன்றி குருன்
@அரசன் மாறும் என்ற நம்பிக்கையுண்டு அரசன்.. நன்றி
@Ramani நன்றி ஜயா...
@ஜெய்லானி உண்மைதான்...நன்றி சகோதரி..
@விக்கி உலகம் நன்றி சகோ...
@S Maharajan நன்றி மகாராஜன்..
@Philosophy Prabhakaran இது உணர்வுள்ள ஒவ்வொருவர் கடமை
@VELU.G நன்றி வேலு...
@Srini நன்றி உங்கள் கருத்தை ஏற்கின்றேன் மாற்றங்கள் செய்வது பற்றி யோசிக்கின்றேன்... நன்றிகள்..
@logu.. நிஜமாகனும் லோகு நன்றி..
@பாரத்... பாரதி... நன்றி பாரத்..பாரதி..
Post a Comment