Thursday, November 28, 2019

Share

காலத்தின் சுழற்சி


நான்கு சுவர்களுக்கு  நடக்கும்
அரச ஆட்சிக்கு
மாற்றம் ஒன்றை
வேண்டி நின்றேன்.
நகரத்தை மட்டுமன்றி
உலகையும் எதிர்கொள்ள
தற்துணிவு கொண்டு
களமாட எண்ணினேன்
காலத்தின் சுழற்சியும்
குடும்ப பிணைப்பும்
சூழ்ந்திருப்போரின் சதியும்
கட்டிப் போட்டு
தனிமையாக்கின
வெளிநாட்டு வாழ்க்கை எனும்
தாரக மந்திரத்திற்குள்....

Tholi Pirasha

Share

மன்னிக்க வேண்டுகின்றேன்


இறைவா...!!

என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்..!!!
ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது...!!!
ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..!!
விடைதேடி வினவுகின்றேன் விடைதர யாரிங்கு....? கண்ணீருக்கு கருவுண்டு கருத்துடன் கண்டுவிட்டால் காலமது கனித்திடும் காதலும் இனித்திடும்-இருந்தும் வினவிடவும் மனமும் இல்லை விடைதேட முயலவில்லை..!! புரிந்துணர்வு குறைந்ததினால் புன்னகைக்கு பஞ்சமிங்கு...! இரக்க குணம் வற்றியதால் இரணியனாய் பலர் உள்ளம்..!! நீரில்லா குளத்தினிலே இரதேடி ஏன் அலைகின்றேன்..!! புரியவில்லை எனோ அது. காத்திருந்து காத்திருந்து மாற்றமேதும் காணவில்லை...!! பாவங்கள் சூழ்ந்து என்னை பரிதவிக்க விட்டதுவோ...!! நானறியா பாவங்களை மன்னிக்க வேண்டுகின்றேன்.

Friday, November 17, 2017

Share

பெண்ணின் மனது....!


பரந்த வான்பரப்பில்
தன் கதிர்களை
சிதற விட்டு
தன் அழகினை
ஆர்ப்பரித்து செல்கிறது
நிலவு!
எனினும்
கறை படிந்த
தன் உடலை
மறைத்து
பௌணர்மி அமாவாசை
என இரு முகம் 
காட்டிச் செல்லுகிறது
பெண்களின் மனங்களை போன்று...!

Friday, November 11, 2016

Share

புன்னகைக்கு பஞ்சமிங்கு...!

என்னையறியாது
ஏதோ  ஒரு ஏக்கம்..!!!
ஏழ்மையாய் என் உள்ளம்
ஏதுமறியாது தவிக்கிறது...!!!
ஏக்கமது இறக்கிபிடிக்கிறது
உள்ளமது உறங்க மறுக்கிறது..!!
விடைதேடி வினவுகின்றேன் 
விடைதர யாரிங்கு....??

கண்ணீருக்கு கருவுண்டு
கருத்துடன் கண்டுவிட்டால்
காலமது கனித்திடும்
காதலும் இனித்திடும்-இருந்தும்
வினவிடவும் மனமும் இல்லை
விடைதேட முயலவில்லை..!!

புரிந்துணர்வு குறைந்ததினால்
புன்னகைக்கு பஞ்சமிங்கு...!
இரக்க குணம் வற்றியதால்
இரணியனாய் பலர் உள்ளம்..!!
நீரில்லா குளத்தினிலே 
இரைதேடி  அலைகின்றேன்..!!

விடைதேடி அலைகின்றேன்
கிடைக்குமென்ற நம்பிக்கையில்..!!

tholi Pirasha
11.11.2016

Sunday, October 30, 2016

Share

என் வாழ்க்கை.

நான்கு சுவர்களுக்கு  நடக்கும்
அரச ஆட்சிக்கு
மாற்றம் ஒன்றை
வேண்டி நின்றேன்.
நகரத்தை மட்டுமன்றி
உலகையும் எதிர்கொள்ள
தற்துணிவு கொண்டு
களமாட எண்ணினேன்
காலத்தின் சுழற்சியும்
குடும்ப பிணைப்பும்
சூழ்ந்திருப்போரின் சதியும்
கட்டிப் போட்டு
தனிமையாக்கின
வெளிநாட்டு வாழ்க்கை எனும்
தாரக மந்திரத்திற்குள்....


Tholi Pirasha

31.10.2016

Friday, June 28, 2013

Share

என்னை மறந்தேனடா...!

உன்னை கண்ட
அந்த நொடி
என்னை
மறந்தேனடா...!
ஆகாயத்தை
அண்மித்ததாய் 
ஆனந்தம் 
கொண்டேனடா...!

-தோழி பிரஷா-

Thursday, June 13, 2013

Share

வாழ்வில் ஆயிரம் பாடம்

சொந்தங்கள் சொர்க்கமே-அவர்கள்
சுய குணங்கள் தெரயும்வரை...!
நல்லதாய் நீ உள்ளவரை
நட்பும் அதுவரை நலமே ...!

உன் முன் சிரிப்பவர்கள்- எல்லோர்
உள்ளத்திலும் உண்மையில்லை...!
உதட்டோரம் தேன் மொழிகள்-அவர்
மனதோரம் கொடிவிஷங்கள்...!

தேன் சொட்டும் வார்த்தைகளை
நம்பி தேளாக துடிக்காதே- நாளை
வான் கொட்டும் மழைபோல-உன்
விழி கொட்டும் கண்ணீர்த்துளிகள்...!
உன்னை புரியாமல் பல பேச்சு
புரிந்திடாதோர் முன் என்ன பேச்சு...!

காற்றுக்கேற்ப வழைந்து கொடுக்கும்
நாணலாய் நீ இருந்தால்...!
அவர் அவர் மனதிற்கெற்ப-நீயும்
வழைந்து கொடுக்க நேர்ந்துவிடும்...!
ஆலமரத்தின் ஆணிவேராய் நீயிரு
சூறாவளி வந்தாலும்
சரிந்திடாது உன் உள்ளம்...!

கூடிவரும் கூட்டம் நாளை ஓடிவிடும் 
உண்மை பாசமுள்ள கூட்டம்
உன்னை என்றும் தேடி வரும்..!
நினைவுகளை தரும் சொந்தம்
நிழலாய் தொடர மறப்பது ஏனோ...?
தேவைக்கு தேடி வந்து
தேவையில்லையென தவிர்த்திட
உறவுகள் என்ன ஜடபொருளோ????

உறவுகளுக்கில்லை அரவணைப்பு
உணர்வுகளுக்கில்லை மதிப்பு..!
ஊரவர் முன் நடிப்பு-உண்மை
அன்புக்கு இல்லை மதிப்பு...!

ஆண்டவன் போடும் கணக்கு-வாழ்வில்
ஆயிரம் பாடம் நமக்கு-யாவும்
அனுபவம் ஆனது எமக்கு...!

--தோழி பிரஷா--
14.06.2013
Share

உண்மையான் பாசம்...!

சந்தோஷங்களை சேமித்து
துன்பங்களை களைந்து
இன்பங்களில் கூடி
நல்லவைகளை சேமித்து
பிழைகளை மன்னித்து.
விவாதங்களை தவிர்த்து
உறவுகளை அணைப்பதே 
உண்மையான் பாசம்...!

தோழி பிரஷா
-12.06.2013